திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கான சிறப்பு குழு- அமைச்சர் தங்கம் தென்னரசு

திங்கள், 18 டிசம்பர் 2023 (18:52 IST)
தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24X7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைப்பேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்குமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாவது:

''திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கான சிறப்பு குழு: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் இயக்குநர்(இயக்கம்) திரு. எம். செல்வசேகர் அவர்கள் தலைமையில், மேற்பார்வைப் பொறியாளர், பாதுகாப்பு மற்றும் கருவி காத்தல், மதுரை, மேற்பார்வைப் பொறியாளர், பொது கட்டுமானம், கோயம்புத்தூர், மேற்பார்வைப் பொறியாளர், இயக்கம் சேலம் மேற்பார்வைப் பொறியாளர், பாதுகாப்பு மற்றும் கருவி காத்தல், சென்னை, மேற்பார்வைப் பொறியாளர், பாதுகாப்பு மற்றும் கருவி காத்தல், திருச்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வைப் பொறியாளர் / சிவகங்கை ஆகிய பொறியாளர்களை உள்ளடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கான சிறப்பு குழு: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் பொது கட்டுமானம் சேலம் வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, கன்னியாகுமரி மாவட்டத்திற்கான சிறப்பு குழு: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் பொது கட்டுமானம் மதுரை வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர், , மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மதுரை மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களின் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24X7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைப்பேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்