தமிழகத்தில் டெங்கு பாதிப்பு.. 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டம்..!

ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:46 IST)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது டிசம்பர் மாதத்தில் பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
டிசம்பர் மாதத்தின் 5 ஞாயிறுகளிலும் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது எனவும், தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அளித்தார்.
 
மேலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனி டெங்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது எனவும், 2023ம் ஆண்டில் இதுவரை டெங்கு பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், காய்ச்சல் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் அதனை அலட்சியப்படுத்தாமல் தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
 
மேலும் மழைக்காலத்தை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்