இதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக தரப்பிற்கு நிம்மதியையும், தினகரன், திமுக தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
ஆனால், நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில் “சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கிற தலைமை நீதிபதியின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சபாநாயகரின் உத்தரவும் நீதித்துறைக்கு உட்பட்டதுதான். எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது” என தெரிவித்தார்.