இனி முகத்தை மறைக்க பர்தா அணியக்கூடாதாம்... மீறினால் தண்டனை!
வெள்ளி, 1 ஜூன் 2018 (11:41 IST)
டென்மார்க்கில் இனி முகத்தை மறைக்கும் விதமாக திரையிடுவதோ அல்லது பர்தா அணிவதோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கபப்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டு வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, டென்மார்க்கில் முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதி செய்ய முடியும் என கூறப்பட்டது.
எனவே, இன்று இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பர்தா தடை சட்டத்திற்கு, 75 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது.
இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.