சென்னையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி மற்றும் 11.45 மணிக்கு செல்லும் ரயில்களும், அதேபோல் மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கு செல்லும் ரயில்களும் பராமரிப்பு பணி காரணமாக நாளை (05.07.2022) முதல் 8ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.