கள்ளக்காதல் விபரீதம்: கண்டித்த மகனை கழுத்தை நெரித்து கொன்ற தாய்!

திங்கள், 23 ஜூலை 2018 (19:14 IST)
கள்ளக்காதலுக்கும் குடி பழக்கத்திற்கும் தடையாய் இருந்த மகனை தனது தோழியுடன் கழுத்தை நெரித்து கொன்ற தாயால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
திருச்சியை சேர்ந்த மீனாம்பாள் தனது கணவனை இழந்து, 13 வயது மகன் அங்குராஜுடன் வசித்து வந்தார். மீனாம்பாள் கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் முத்தழகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்த பழக்கம் நாளடைவில், கள்ளக்காதலாக மாறியுள்ளது. எனவே, முத்தழகன், மீனாம்பாள் தோழி லட்சுமி ஆகியோர் அடிக்கடி மீனாம்பாள் வீட்டிற்கு வந்து குடிப்பதும், உடலுறவில் ஈடுபடுவதும் என இருந்துள்ளனர். 
 
இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்தவுடன் மீனாம்பாளின் மகனிடம் இது குறித்து கூறியுள்ளனர். என்ன செய்வதென்று தெரியாத சிறுவன், தனது தந்தை வீட்டு உறவினர்களிடம் கூறியுள்ளார். 
 
அவர்கள் மீனாம்பாளை கண்டித்துள்ளனர். ஆனாலும், முத்தழகனை பிரிய மீனாம்பாளுக்கு மனமில்லை. எனவே, மூவரும் இணைந்து மகனை கொல்ல திட்டமிட்டு, மகனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அதோடு மகன் தற்கொலை செய்துக்கொண்டான் என நாடகமாடியுள்ளார். 
 
ஆனால், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் மீனம்பாள் உண்மையை ஒப்புக்கொண்டதால், மீனம்பாளும் அவளது தோழியும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகியுள்ள முத்தழகனை போலீஸார் தேடி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்