அவரின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை : வாட்ஸ் அப்பில் கதறும் இளம்பெண்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:49 IST)
கோவை எஸ்.என். எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனரின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை இளம்பெண் கதறும் வாட்ஸ் உரையாடல்கள் வெளியாகியுள்ளது.
 
கோவையை சேர்ந்த கல்லூரி நிர்வாகி அங்கு பணிபுரியும் இளம் பெண்களுடன் கூத்தடிக்கும் புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒரு அறையில் அவர் காத்திருக்க, அங்கு அவரும் இளம்பெண்ணை விரட்டி விரட்டி கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து அவர் கூத்தடிக்கும்  காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 
 
அவர் கோவையில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்(64) எனவும், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், அந்த நபர் வலுக்கட்டாயமாக அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது. அவரின் தொல்லை தாங்க முடியாமல் சிலர் வேலையை விட்டு சென்று விட்டனர். சிலர், வெளியே கூற முடியாமல் இருந்துள்ளனர். 
 
இது தொடர்பாக ஒரு பெண் அந்த கல்லூரி நிர்வாகி இயக்குனரின் மகனும் கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான் நளின் என்பவருக்கு ஒரு பெண் வாட்ஸ் அப்பில் புகார் கூறும் உரையாடல்கள் லீக் ஆகியுள்ளது.
 
சார், உங்களை நம்பித்தான் அவர் கொடுத்த பாலியல் தொல்லைகளை யாரிடம் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். நேத்து கூட உங்கள் பார்த்த போது, லீக் ஆன வீடியோவில் இருப்பது நீ இல்லை என்று கூறிவிடு என சொன்னீர்கள். என்னால் முடியவில்லை. எனக்கு எதேனும் ஆச்சுனா நீங்களும், எம்.டி சாரும்தான் பொறுப்பு. நான் இருப்பது பிரயோஜனம் இல்லை” என அவர் அதில் புலம்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்