சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டதால் உயிரிழப்பு.. மேலும் 5 பேர் பாதிப்பு..!

Siva

வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:39 IST)
சேலம் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி போட்ட நிலையில், அந்த ஊசி மருந்தால் அலர்ஜி ஏற்பட்டதால் ஆறு நோயாளிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய நிலையில், இந்த மருந்து சில நோயாளிகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி ஏற்பட்டதால் ஆறு பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவர்களை அடுத்து ஆறு பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் ஊசி போட்ட ஆறு பேர்களில்  ஒருவர் இறந்துவிட்டார் என்றும், அவர் அவரது பெயர் வேணுகோபால், 40 வயது உடையவர் என்று கூறப்படுகிறது. மேலும், 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை டீம், காவல்துறை அதிகாரிகளுடன் விரைந்து மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த வேணுகோபாலுக்கு ஏற்கனவே சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும், அவருக்கு ஊசி போட்டதால் அலர்ஜி ஏற்பட்டதை எடுத்து அவர் இறந்து விட்டதாகவும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், வேணுகோபால் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்