சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த போது, நடிகர் சிவகார்த்திகேயனை சிலர் பின்புறமாக தாக்கினர். ஆனால் அது பற்றி மீடியாக்களிடம் அவர் வாய் திறக்கவில்லை. போலீசாரிடமும் புகார் அளிக்கவில்லை.
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, மதுரை விமான நிலையத்தில், அவரை தாக்கிய சிலர் மீது ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் “அவர்கள் மீது நான் புகார் அளித்திருந்தால், போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். இதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிக்கும். அதனால் அதை நான் செய்ய விருப்பம் இல்லை” என்று கூறினார்.