தினகரன் கட்சியில் இணைந்த ரஜினியின் குரல்!

சனி, 9 மார்ச் 2019 (16:42 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழக அரசியல் பரபரப்பாகவே உள்ளது. திமுக காங்கிரஸ் உடன் தொகுதி குறித்து பேசி வரும் நிலையில், அதிமுக தேமுதிக கூட்டணி இழுபறியில் உள்ளது. 
ஆனால், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எந்த ஒரு ஆரவாரமும் இன்றி அமைதியாக காணப்படுகிறது. ஆனால், தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என்பதை மட்டும் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
 
மேலும், தின்கரன் 3வது அணி அமைக்க திரைமறைவு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் அவ்வப்போது பரவி வருகின்றன. இது மட்டுமின்றி வேல்முருகன் கட்சி உள்பட சில கட்சிகள் தினகரனின் கட்சியுடன் கூட்டணி சேர முன்வந்துள்ளது. 
 
இந்நிலையில், பிரபல பாடகர் மனோ, டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் அமமுக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்