தமிழக திரைப்படங்களுக்கு தடை, தமிழ் நாளிதழ்கள் எரிப்பு, தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. தமிழ் இளைஞர் மீது தாக்குதல். தமிழர்களுக்கு எச்சரிக்கை என கர்நாடகா கொந்தளித்தது.
இந்நிலையில் வைகோ தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார், பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய வைகோ, பேஸ்புக்கில் தனது கருத்தை பதிவு செய்த இளைஞன் தாக்கப்பட்டதற்கு கர்நாடகா அரசு பதில் சொல்லவேண்டும்.