மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்த 85 வயது மாமனார்.. அதிர்ச்சி காரணம்..!

செவ்வாய், 7 நவம்பர் 2023 (15:32 IST)
85 வயது மாமனார் தனது மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், கும்பகோணம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் என்ற பகுதியைச் சேர்ந்த 85 வயது சண்முகவேல் என்பவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மகன் ராஜேஷ் கண்ணா என்பவருக்கும் பிரேமா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பிரேமா அடிக்கடி சொத்தை பிரித்து தரும்படி தனது மாமனாரிடம் சண்டை போட்டதாகவும் ஆனால் சண்முகவேல் சொத்தை பிரித்து தர முடியாது என்று கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை தனக்கு சேர வேண்டிய சொத்தை  சொத்தை பிரித்து தருமாறு மாமனாரிடம் பிரேமா மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து சண்முகவேல், பிரேமாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் சண்முகவேலை கைது செய்தனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்