400 கோடி கொடுக்கலைன்னா…! அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்! – கைது செய்த போலீஸார்!

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (11:53 IST)
பணம் கேட்டு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிர்வகித்து வரும் முகேஷ் அம்பானிக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அவருக்கு வந்த மின்னஞ்சலில் முதலில் ₹20,00,00,000 கேட்டு அதை கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. அதன் பின்னர் தொகை 200 கோடி, 400 கோடி என்று உயர்த்தப்பட்டு கொண்டே இருந்தது.
இது போல தொடர்ந்து ஐந்து மின்னஞ்சல்கள் வந்ததுடன் “என்ன செய்தாலும் என்னை உங்களால் பிடிக்க முடியாது. உங்களைக் கொல்ல எனக்கு ஒரு துப்பாக்கி குண்டு போதும்“ என் றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் மும்பை காவல்துறை இந்த மர்ம மின்னஞ்சல் அனுப்பிய நபரையும் தேடி வந்தது. இந்நிலையில் இந்த மின்னஞ்சலை அனுப்பியது தெலுங்கானாவை சேர்ந்த கணேஷ் ரமேஷ் என்ற 19 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்