தந்தி டிவியின் தலைமை செயல் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே சில நாட்களுக்கு முன்னர் திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது. இந்த ராஜினாமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விவாதமாகின. இதனால் பாண்டே ஒரு வீடியோ மூலம் தனது முடிவுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
அந்த வீட்டியோவில் ‘ நான் தந்தி டி.வி. யின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் ஊடகத்துறையில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து ஒரே வேலையை செய்வதால் ஏற்படும் அயர்ச்சியின் காரணமாகதான் எடுத்துள்ளேன். தந்தி டிவி குழுமத்தோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த முடிவை தந்தி குழுமமும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டது. இது புரிதலோடு எடுக்கப்பட்ட ஒரு பிரிதல்.’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த செய்திக்குப் போட்டியாக தற்போது புதுக் கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் உலாவர ஆரம்பித்துள்ளது. அதில் ரஜினியின் கட்சியில் ஆலோசராக ரங்கராஜ் பாண்டே சேர இருக்கிறார் அதனால்தான் தந்தி டிவி யில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகக் கருத்துகள் பரவத்தொடங்கியுள்ளன. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் அந்த தகவல் உண்மையில்லை என அறிவித்துள்ளார்.