லண்டன் மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்களுடன் சேர்ந்து அப்பல்லோ மருத்துவமனை முதல்வருக்கு தொடர் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எப்படி நடக்கிறது, யார் அதை கவனித்து கொள்கிறார் என்ற கேள்வி எழும்பி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தான் தற்போது அரசை வழி நடத்துகிறார். இவரது உத்தரவின் பேரில் தான் தற்போது அனைத்தும் நடப்பதாக கூறப்படுகிறது. அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவின் அறைக்கு எதிரேலேயே இவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்துதான் அவர் உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.