கொரோனா தொற்று பாதித்தவருக்கு தனியாக வாக்குச்சாவடி ?

செவ்வாய், 2 மார்ச் 2021 (11:31 IST)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தலுக்கு அதிமுக தயாராக இருப்பதாக தகவல். 

 
பொள்ளாச்சி ஜெயராமன் தனது சமீபத்திய பேட்டியில், அதிமுக தேர்தலை சந்திக்க எல்லா நிலையிலும் தயாராக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் வக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தலுக்கான புதிய விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டோம் என தெரிவித்தார். 
 
மேலும், வாக்காளர் அடையாள அட்டையை இணையதளத்தில் சரி பார்த்துக்கொள் வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கொரோனா தொற்று பாதித்தவருக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்