அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு..!

வியாழன், 15 ஜூன் 2023 (12:22 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் குறித்து நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் துரை கண்ணன் முறையீடு வழக்கு மற்றும் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரிய அமலாக்கத்துறை மனு ஆகியவை இன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
மேலும் இடைக்கால ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் துரை கண்ணன் முறையீடு மனுவை, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரிய மனு மீதான விசாரணை மனு மீதான முடிவெடுத்த பிறகு ஜாமின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது!
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்