12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கலா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

புதன், 1 ஜூலை 2020 (11:41 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அம்மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் கிட்டத்தட்ட முடிவடைந்து அதன் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்ட நிலையில் மிக விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் தற்போது திடீரென பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது ’12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்றும் பள்ளிகள் திறக்க இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார், இதனால் இந்த கல்வியாண்டே பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்