தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரித்ததற்கு காரணம் திமுக அரசே என குற்றம் சாட்டி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியபோது தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் போதைப்பொருள் கடத்தலில் திமுக தான் உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கிறது என்றும் ஹாலிவுட் படங்களை போல் போதைப்பொருள் கடத்துவதில் ஜாபர் சாதிக் விளங்கி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.