தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் ஒருநாள் வீழ்ந்து விடும்; சீமான் பேட்டி

செவ்வாய், 17 அக்டோபர் 2023 (13:44 IST)
இந்த உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தது போல், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும் வீழ்ந்து விடும் என நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது எனவும், மக்களை நம்பியே தேர்தல் களம் காண்கிறோம் என்று கூறிய சீமான், திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது எனவும், திமுக அரசு வாக்குறுதிகளை 100% நிறைவேற்றவில்லை எனவும், இந்த உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தது போல், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும் வீழ்ந்து விடும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்திற்கு தமிழக அரசு கொடுத்து வருகிறது, விஜய் அரசியல் கட்சி துவங்க உள்ளதால் நெருக்கடி தருகின்றனர் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்