தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:21 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் தமிழகத்தையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உள்மாவட்டங்களிலும், கன்னியாக்குமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்