செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்.. இதுதான் காரணமா?

புதன், 11 ஜூலை 2018 (12:53 IST)
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதை சீமான் தவிர்த்து வருவதற்கான காரணங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்தும், அரசியலில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசியதற்கு அவர் மீது தமிழக காவல் துறை ஏராளமான வழக்குகள் பதிந்தது.
 
இதனிடையே அரசிற்கு எதிராக பேசியதாகக் கூறி தமிழக வாழ்விரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகனை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கும் சீமான் மதுரையில் தங்கி தினமும் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். 
 
அதேபோல் சமீபகாலமாக சீமான் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதையும் செய்தியாளர்களை சந்திப்பதையும் தவித்து வருகிறார். இதைப் பற்றி கூறிய அவரது நெருங்கியவர்கள், தமிழக அரசு எப்படியாவது சீமானை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சீமான் உணர்ச்சிவயப்பட்டு எதாவது பேசிவிட்டால் சீமான் சிறைக்கு செல்ல நேரிடும். இதனால் சிறையில் இருக்கும் கட்சித் தொண்டர்களை மீட்க முடியாமல் போகும். ஆகவே சிறிது காலம் சீமான் இப்படி தான் இருக்க போகிறார் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்