காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவம்: வருத்தம் தெரிவித்தார் சீமான்

திங்கள், 16 ஏப்ரல் 2018 (12:46 IST)
சென்னையில் ஐபிஎல் போட்டி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு நடந்த இந்த போராட்டத்தில் ஒருசில போராட்டக்காரர்கள் காவல்துறையினர்களை சரமாரியாக அடித்த காட்சியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீருடை அணிந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்
 
இந்த நிலையில் காவல்துறையினர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சியினை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் சீமான் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே சீமான் எந்த நேரத்திலும் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் காவிரி போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உளப்பூர்வமான மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். 
 
காவல்துறையினர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என்று முதலில் கூறிவந்த சீமான், தற்போது  காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உளப்பூர்வமான மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருப்பது முரண்பாட்டின் மொத்த வடிவமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்