இந்த நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கிய 4 ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் 8) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11 ஆம் தீதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக தூய்மை, மின் இணைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.