பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?

திங்கள், 18 அக்டோபர் 2021 (07:23 IST)
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து அந்த ஏழு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று தென் மாவட்டங்களான 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
குறிப்பாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கனமழை பெய்யும் 7 மாவட்டங்களில் திங்கட்கிழமை இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்