கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு! – மீட்பு பணியில் இராணுவம், விமானப்படை!

ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (08:58 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களிலிருந்து மக்களை மீட்க ராணுவம் மற்றும் விமானப்படை விரைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் முக்கிய விவசாய பகுதியான குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் இடமலையாரு அருகே 2 கி.மீ தூரத்தில் மலையின் ஒரு பகுதி இடிந்ததால் அணை நீர் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்கு இடையேயான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இவ்வாறாக கேரளாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரிடர்களில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் மக்களை மீட்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை கேரளாவுக்கு விரைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்