கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் நகராட்சியில், 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சியில் 30 வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரி சாமி. இவர் அந்த பகுதியில் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார்.
இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 5 வயது குழந்தையை அப்பள்ளியின் தாளாளரும், திமுக நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்!