பள்ளி, கல்லூரிகள் திறப்பு எதிரொலி: மாநகர பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள்..!

Mahendran

திங்கள், 3 ஜூன் 2024 (10:57 IST)
அடுத்த வாரம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளதை அடுத்து மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
தானியங்கி கதவுகள் இல்லாத பேருந்துகளில் மாணவர்கள் பயணம் செய்யும்போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது
 
இதனை அடுத்து மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணிக்காதவாறு பள்ளி மற்றும் கல்லூரிகள் வழியாக செல்லும் பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது 
 
குறிப்பாக மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 448 பேருந்துகளுக்கு புதிதாக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
சென்னை மாநகரை பொருத்தவரை 3200 பேருந்துகள்  இயங்கி வரும் நிலையில் அதில் 2000 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் உள்ளது என்றும் சில பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பழுதாக இருப்பதை அடுத்து அதை பழுது பார்க்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்