இன்று முதல் மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றம்: கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு..!

Siva

ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (08:19 IST)
சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் 08.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதன் காரணமாக மா.போ.கழகம், பயணிகள் நலன் கருதி மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
 
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் 08.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், வரும் 08.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
 
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்