ஒரு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்கினால் அத்திவரதர் பாஸ் – காஞ்சிபுரத்தில் நடக்கும் மோசடி !

சனி, 20 ஜூலை 2019 (13:51 IST)
காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு வியாபாரிகள் சிலர் தங்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்கினால் அத்திவரதர் பாஸ் அளிக்கப்படும் என மோசடியில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். அத்திவரதரை சந்திக்க பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோர் விஐபி வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நேற்று விஐபி வரிசையில் வரிச்சூர் செல்வம் என்ற பிரபல ரவுடி தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்டை கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இதுபோல பல விஜபி  டோனர் பாஸ்களைக் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இலவசமாகப் பெற்று பட்டு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கல்லா கட்டி வருகின்றனர். பட்டு வணிகர்கள் தங்களிடம் புடவை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு புடவை வாங்கினால் இரண்டு அத்திவரதர் பாஸ் இலவசம் என்று ஆசை காட்டி, பட்டுப் புடவைகளை விற்றுவருகிறார்கள்’ என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் அத்திவரதரை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தாலும் தரிசனம் செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்