ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (11:50 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்து வருகிறது. ஆறு மாதத்திற்குள் இந்த விசாரணையின் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த ஆணையம் அதன்பின்னர் பலமுறை விசாரணைக்காக நீட்டிப்பு பெற்று விசாரணை செய்து வருகிறது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. ஆனால் மருத்துவர்களின் சாட்சியம் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆணையத்தில் மருத்துவர் குழு ஒன்று அமைத்து மருத்துவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும்,  அதுவரை இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்பல்லோ நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 
 
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் அப்பல்லோ நிர்வாகம் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், அப்பல்லோ கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்