சென்னைக்கு அழைத்து வரப்படும் சவுக்கு சங்கர்..எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்?

Siva

வெள்ளி, 10 மே 2024 (09:42 IST)
சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று  சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்து பாதுகாப்புடன்  சவுக்கு சங்கரை போலீசார் அழைத்து வரவிருப்பதாகவும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காக, கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கர் நேற்று கைதானார் என்ற நிலையில் சென்னையில் பதிவான 2 வழக்குகளில் ரிமாண்ட் செய்ய கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் அழைத்து வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்ட உடன் நீதிபதியின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்