கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து: சவுக்கு சங்கர் திடீர் முழக்கத்தால் பரபரப்பு..!

Siva

திங்கள், 13 மே 2024 (10:58 IST)
மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திடீரென கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சவுக்கு சங்கர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை கோவை சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு வலது கையில்  மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் கோவை மருத்துவமனைக்கு வந்த போது அவர்  கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து என்று முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை தகுந்த பாதுகாப்போடு போலீசார் அழைத்து சென்றனர்

பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய பேசிய வழக்கு, கஞ்சா வழக்கு, பெண் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார்,  பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகார் உள்பட பல வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பாய்ந்து உள்ளது என்பதும் சமீபத்தில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்