தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக தேர்தலில் ஓட்டு போட செல்லும் வாக்காளர்களுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டுகள் வழங்கப்படும். அதை காட்டி அடையாளத்தை உறுதி செய்த பின்னர் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
ஆனால் இம்முறை வழங்கப்படும் வாக்கு அனுமதி சீட்டில் புகைப்படம் இடம்பெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்கு சீட்டில் வாக்குசாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகியவை அடங்கிய தகவல் சீட்டு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.