உலகளவில் கவனம் ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்! – குரல் கொடுத்த ஐ.நா சபை!

திங்கள், 13 ஜூலை 2020 (09:14 IST)
தமிழகத்தின் சாத்தான்குளம் வழக்கு குறித்து முறையான விசாரணை வேண்டும் என ஐ.நா சபை கூறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோர் போலீஸார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது.

இதுகுறித்து மதுரை கிளை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சிபிசிஐடி போலீஸாரால் சாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமாக காவலர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பும் தடை செய்யப்பட்டது.

இந்த சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் ஐ.நா சபையில் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஐநா பொது செயலாளர் ஸ்டீபன் ட்ஜாரிக் “இதுபோன்ற ஒவ்வொரு மரணமும் அதுசார்ந்த அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்