ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அவரின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினார்.
இந்த கடிதங்கள் பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் என முக்கிய தலைவர்களுக்கு வி.கே. சசிகலா என்னும்பெயரில் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே அனுப்பப்படுகிறது.
எனக்கு ஆங்கிலம் தெரியாது, என்னால் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள முடியாது, தமிழ் மட்டுமே தெரியும். ஆகவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தமிழிலேயே மொழிபெயர்த்துக் கொடுத்தால்தான் தன்னால் இந்த நீதிமன்ற விசாரணையில் முழுமையாக ஈடுபட முடியும். ஆகவே வழக்கு ஆவணங்களை தமிழில் மொழியாக்கம் செய்து தரவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.