ஜெ. மர்ம மரணம்: சசிகலா வைத்த செக்; விசாரணை வலையத்தில் ஸ்டாலின்?

வியாழன், 24 ஜனவரி 2019 (17:52 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
 
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் செயலாளர், உயர் காவல் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், அதிமுகவை சேர்ந்தவர்கள், சசிகலா உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. 
 
சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை தனது வழக்கறிஞர் மூலம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தார். தற்போது இந்த ஆணையம் ஒ.பன்னீர் செல்வத்தை விசாரணை செய்து அதோடு விசாரணைகளை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
ஆனால், ஆணையத்தின் இந்த முடிவிற்கு சசிகலா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறிய மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டிருப்பது இந்த வழக்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்