சிங்கப்பூர் குயின் எலிசெபெத் மருத்துவமனையின் சீனியர் பிசியோதெரப்பிஸ்டுகளாக பணி புரியும் சீமா மற்றும் மேரி ஆகிய இருவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேசிவ் பிசியோ தெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிசியோ தெரபியில் பெரிய நிபுணர்த்துவம் பெற்றவர்கள் இல்லையாம், இவர்களை விட சிறந்த பிசியோ தெரபி மருத்துவர்கள் இந்தியாவிலேயே இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பிறகு ஏன் சசிகலாவும், அப்பல்லோ நிர்வாகமும் இந்திய பிசியோ தெரபி மருத்துவர்களை அனுகாமல், சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்களை அனுகினார்கள் என்றால், சிங்கப்பூர் நாட்டின் சட்டப்படி எந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறோமோ, அவர்களைப் பற்றிய தகவலை யாரிமுடம் பேசக்கூடாது என்ற சட்டம் உள்ளது.