சசிகலா விடுதலையாகும் தேதி அறிவிப்பு! ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

திங்கள், 25 ஜனவரி 2021 (17:08 IST)
சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிப்பட்டுவந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படவுள்ளார் என சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டார்.

மீண்டும் சசிகலாவுக்கு தைராய்டு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விக்டோரியா மருத்துவமனையில் உள்ள ஐசியுவில்அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மற்றொரு பக்கம் சசிகலா உறவினர்கள் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி வந்தனர்.

இந்நிலையில் சசிகலா (66)உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட் நிலையில் தற்போது விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிக்ள் முழுமையாக நீங்கியது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நான்கு ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின்னர் சசிகலா விரைவில் தமிழ்நாட்டுக்குத் திரும்பவுள்ளார். அவரது அரசியல் நடவடிக்கை நிச்சயமாக விஸ்வரூமெடுக்கும் எனவும் தெரிகிறது.
தற்போது அதிமுகவினர் சசிகலா, தினகரனை கட்சியை விட்டு நீக்கியவிட்டதால் அமமுக கட்சியைத் தொடங்கியுள்ள தினகரன் அதிமுகவின் வாக்குகளைச் சிதறடிப்பார் எனவும் இத்தேர்தலில் சசிகலாவின் வியூகம் கைக்கொடுக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்