சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது: விடிய விடிய விசாரணை என தகவல்!

சனி, 7 ஜனவரி 2023 (11:25 IST)
சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது: விடிய விடிய விசாரணை என தகவல்!
செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
செம்மர கடத்தல் வழக்கில் அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இதனை அடுத்து பாஸ்கரன் இடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும் நடத்திவந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூபாய் 45 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்