உங்களிடம் என்னால் பேச முடியாது: விசாரணைக்கு மறுக்கும் சசிகலா!

புதன், 24 ஜனவரி 2018 (15:25 IST)
பெங்களூர் பரபப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா தற்போது மவுன விரதம் இருந்து வருவதால், தன்னால் வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என சசிகலா பதில் அனுப்பியதாக தகவல்கள் வருகிறது.
 
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து 189 இடங்களில் நடத்தினர். இந்த சோதனை தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்தது.
 
அதன் பின்னர் சமீபத்தில் போயஸ் கார்டனில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் சசிகலா அறையில் இருந்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. இந்த சோதனைக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
 
அதே போல பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கும் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். இதற்கு சசிகலா எழுதியுள்ள பதில் கடிதத்தில், கடந்த சில நாட்களாக மவுன விரதம் இருந்து வருகிறேன். எனவே என்னால் விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாது. பிப்ரவரி 10-ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்கிறேன் என கூறியுள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்