ஜெ.வின் மறைவிற்கு முன்பும் சரி, பின்பும் சரி, சசிகலா மீது ஏராளமான புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா. அதிமுக சட்ட விதிகளின் படி, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல், ஜெ.வின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் புகார் மனு கொடுத்தார்.
அதன்பின், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், ஜெ.வின் மர்ம மரணம் குறித்த சந்தேகத்தை அவர்கள் கையில் எடுத்தார்கள். எனவே, சமீப காலமாக சசிகலா புஷ்பா அமைதி காட்டி வந்தார்.
இந்நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் சசிகலா தரப்பிலிருந்து சிலர் இறங்கினார். ஆனால், சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகி, அதில் சசிகலா தரப்பிற்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்தால், நானே சசிகலாவை ஆதரிப்பேன். அதுவரை அவரை எதிர்த்து நான் நிற்பேன்” என காட்டமாக பேசி வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம் சசிகலா புஷ்பா.