சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சசிக்கலா மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் சசிக்கலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடர் சம்பவங்களால் அதிமுக தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.