இதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர் ஜூலை 7 ஆம் தேதிக்குள் சரண்டர் ஆக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராஜகோபால் தனது வயது மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தற்போது சரணடைய இயலாது என்றும் தான் சரணடைய கால அவகாசம் வழங்குமாறும் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் உடனே சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் புழல் சிறைக்குள் அடைக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து உடல்நிலை மோசமாக இருந்து வந்ததால் இப்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று இரவு மாரடைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.