ஏற்கனவே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்பட பலர் முதல்வரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
அன்பான தாயை பிரிந்து வாடும் முதலமைச்சரின் வேதனையை உணர முடிகிறது. தாயின் மறைவு முதல்வருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.