நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழு விசாரணை செல்லாதா?

புதன், 9 மே 2018 (07:59 IST)
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி, அந்த கல்லூரியின் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் நியமனம் செய்த சந்தானம் குழு தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஒரே வழக்கை இரண்டு பிரிவினர் ஏன் விசாரணை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நியமித்த சந்தானம் விசாரணைக் குழுவை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சமூக ஆர்வலர் செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்தார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளதாகவும், இன்றைய விசாரணைக்கு பின்னர் ஆளுனர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவின் விசாரணை செல்லுமா? அல்லது செல்லாதா? என்பது குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் நிர்மலா தேவியின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் இன்று அவர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலிசாரால் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்