நிர்மலா தேவி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்தார் சந்தானம்!

திங்கள், 14 மே 2018 (19:33 IST)
அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி, அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் தவறாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு உதவியதாக முருகன் மற்றும் கந்தசாமி என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
சந்தானம் குழு விசாரணை நடத்தி முடித்துவிட்டு, வரும் மே 15 ஆம் தேதி விசாரணை அறிக்கையை சமர்பிக்கவுள்ள நிலையில், அறிக்கையை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், தற்போது சந்தானம் நிர்மலா தேவி வழக்கில் இதுவரை நடந்த விசாரணை மற்றும் பிற செய்திகளை அறிக்கையாக அளுநரிடம் சமர்பித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்