குர்குரே, லேஸோடு சமோசாவிற்கும் தமிழகத்தில் வந்தது தடை!

சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:59 IST)
இனி தமிழக கல்லூரி கேண்டீன்களில் குர்குரே, ஏஸ், சமோசா ஆகியவற்றை விற்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 
சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் சரியான முறையில் சரியான உணவை உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  தமிழக உணவுபொருள் பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் வனஜா கலந்துக்கொண்டார். 
 
நிகழ்ச்சியின் போது எந்த உணவுகளை எப்படி உட்கொள்ள வேண்டும், என்னென்ன உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் போன்று உணவுகள் குறித்த பல ஆரோக்கிய தகவல்களை வனஜா பகிர்ந்க்கொண்டார். 
குறிப்பாக கல்லூரி கேண்டீன்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சமோசா, குர்குரே, லேஸ், கலர் கலந்த காலிபிளவர் பக்கோடா, மற்றும் துரித உணவு வகைகள் விற்பதை அனுமதிக்க கூடாது என்று கூறினார்.
 
அதோடு, தமிழக கல்லூரி கேன்டீன்களில் சமோசா மற்றும் குர்குரே, லேஸ் போன்ற நொறுக்கு தீனி வகைகளை விற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இது போன்று தமிழகத்தில் உள்ள 48 தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்