முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரகாஷ் ராஜ், சத்தியராஜ், சீமான், விஜய் போன்ற நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்திரசேகர்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழன் எங்கு சென்றாலும் அவனுக்கு பெருமைதான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான். மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை.
தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார். தமிழந்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என அவர் கூறியது ரஜினியை விமர்சிக்கும் வகையில் உள்ளது.