பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர். ஆச்சரியத்தில் பொதுமக்கள்

வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (00:15 IST)
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி பதவியேற்றதும் அதிரடி நடவடிக்கை எடுத்தது போலவே நம்மூரிலும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி அவர்கள் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.


 
 
பதவியேற்ற முதல் நாளே அரசு மருத்துவமனைக்கு அதிரடியாக விசிட் செய்து நோயாளிகளின் குறைகளை தீர்த்தவர். தன்னிடம் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி கொடுத்து உட்கார வைத்து பின்னர் தரையில் அமர்ந்து அவர்களுடைய குறைகளை கேட்டவர்.
 
இந்த நிலையில் இன்று அவர் திடீரென சேலம் மல்லிக்கை ஊராட்சிக்கு உட்பட்ட கருத்தராஜபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்றார். தற்போது ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நடந்து வருவதால் ஆசிரியர் யாரும் பணிக்கு வரவில்லை என்பதை அறிந்து உடனே அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே அறைக்கு வரச்செய்ய வைத்து அனைவருக்கும் அவரவர் பாடங்களை நடத்தினார்.
 
சுமார் ஒருமணி நேரம் குழந்தைகளுக்கு கலெக்டர் ரோகினி பாடம் நடத்தியதை பார்த்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்